டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியல் வெளியீடு: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு எத்தனையாவது இடம்?


ஆடவர் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பட்டியலில் ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (853 ரேட்டிங் புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (838) இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (808 புள்ளிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் நான்காவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் மற்றும் இங்கிலாந்தின் டேவிட் மலான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 760 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டெவோன் கான்வே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் முகமது வசீம் இப்பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலின் டாப் 10 தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டும்தான். இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் 13வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 14வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 16 வது இடத்திலும் உள்ளனர்.

x