110 மீட்டருக்கு சிக்ஸரை பறக்க விட்ட சஞ்சு சாம்சன்: வைரலாகும் வீடியோ!


ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த 110 மீட்டர் சிக்ஸரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 12 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதன் பின் வந்த அபிஷேக் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் (58), ரியான் பராக் (22) ஆகியோர் அணியை ரன் ரேட்டை உயரச் செய்தனர். அவரும், பராக்கும் இணைந்து 105 ரன்களை குவித்தனர்.

இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களைக் குவித்தார். இதில், அவர் 110 மீட்டர் தூரத்தில் ஒரு சிக்சர் அடித்தார். இந்த சிக்ஸரின் வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுக்களையும், ஷிவம் துபே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

x