16வது முறையாக கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜெண்டினா: 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது


கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியை வென்று அர்ஜென்டினா அணி 16வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இன்று மோதின. 28 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றிருந்த கொலம்பியா அணியும், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும் பலப்பரீட்சை நடத்தியதால் இந்த போட்டி, உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆட்டம் துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். இருப்பினும் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. இதனால் 90 நிமிடங்களுக்கு பிறகு 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லாட்டாரோ மார்ட்டினீஸ் லாவமாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் பின்னர் பதில் கோல் அடிக்க கொலம்பியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மேலும் ஐந்து நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16வது முறையாக கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினா அணி சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 5 கோல்கள் அடித்த மார்ட்டினீஸ், தங்கக்காலனிக்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

x