யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன்!


யூரோ கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐரோப்பிய கால்பந்து அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், கோல் அடிக்க முடியவில்லை.

2ம் பாதியின் 47-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோலை அடித்தார். இதற்கு பதில் கோல் திரும்ப இங்கிலாந்து அணி தொடர்ந்து முயற்சி செய்தது. 73 வது நிமிடத்தில் இங்கிலாந்தில் கோல் பாமர் பதில் போல் அடித்து அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 86வது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கேல் ஒயர்ஸ்பால் ஒரு கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை பெற்று தந்தார். ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று யூரோ கோப்பையை தன்வசமாக்கியது.

x