டிஎன்பிஎல் தொடர்: திருப்பூர் அணி வெற்றி


பாலசந்தர் அனிருத்

கோவை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐடீரீம் திருப்பூர் தமிழாஸ் அணி.

கோவையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக உத்திரசாமி சசிதேவ் 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். ஜெகதீசன் கவுசிக் 28, ஸ்ரீ அபிஷேக் 21 ரன்கள் சேர்த்தனர். ஐடீரீம் திருப்பூர் தமிழாஸ் அணி சார்பில் அஜித் ராம் 3, ராமலிங்கம் ரோஹித் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐடீரீம் திருப்பூர் தமிழாஸ் அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பாலசந்தர் அனிருத் 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். முகமது அலி 27 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களும், அமித் சாத்விக் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்தனர்.

ஐடீரீம் திருப்பூர் தமிழாஸ் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

x