சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியா புறக்கணித்தால் எந்த அணிக்கு வாய்ப்பு?


சென்னை: சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி விலகினால், எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2025) பாகிஸ்தான் நடத்த உள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியை அந்த நாட்டில் இருந்து மாற்ற பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) மீது அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஏன் என்றால் இந்திய அணியை பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு அனுமதிக்காது என்றும், இதனால் போட்டியை மாற்ற வேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஐசிசி சம்மதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தானில் போட்டிகள் நடந்து முடிந்து இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில், எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐசிசி விதிகளின்படி, 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் நாடு நேரடியாக தகுதி பெறும். இதன்படி தற்போது மொத்தம் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஒருவேளை இந்திய அணி தொடரில் இருந்து விலகினால், 9வது இடத்தில் உள்ள இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐசிசி போட்டியில் இருந்து எந்த அணி விலகினாலும், புள்ளி பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் அணி தகுதி பெறும். தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்ற அணிகளாகும்.

கடந்த 2013 மற்றும் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது தகுதி விதிகள் வேறுபட்டன. போட்டியின் திட்டமிடப்பட்ட காலத்தின் முடிவில் ஐசிசி ஓடிஐ தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். ஆனால் இம்முறை மட்டும் உலகக் கோப்பை போட்டித் தரவரிசையின் அடிப்படையில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

கிரிக்கெட் மக்களின் நாடு என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணி, கடந்த உலகக் கோப்பையில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் டிராபிக்கான தகுதியை இழந்து தவித்து வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக வென்று 7வது இடத்தைப் பெற்று கடைசி கட்டத்தில் வாய்ப்பைப் பெற்றது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், போட்டி ஹைபிரிட் மாடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன. இந்தியா அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

x