பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது ஸ்பெயின் அணி | EURO 2024


முனிச்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸை அணி 2-1 என்ற கோல் கணக்கில்வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின். இந்த ஆட்டத்தில் இளம் வயதில்கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் லமின் யாமல் படைத்தார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில்பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கேப்டன் கிளியான் பாப்பே அடித்த கிராஸை தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார் ரண்டல் கோலோ முவானி. இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் பதிலடி கொடுத்தது. பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து லமின் யாமல் இடது காலால் வலுவாக உதைத்த பந்து கோல்கம்பத்தின் இடது புற விளிம்பில் பட்டு கோல் வலையை துளைத்தது.

இந்த கோலை அடித்த லமின் யாமலுக்கு16 வயது 362 நாட்களே ஆகின்றன. இதன்மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர், படைத்தார். இதற்கு முன்னர் 2004-ம் ஆண்டு தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிராக சுவிட்சர்லாந்து வீரர் ஜோகன் வொன்லாந்தன் (18 வயது 141 நாட்கள்) கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. யமின் யாமல் அடித்த கோல் காரணமாக ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

அடுத்த 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் நவாஸ் பெனால்டி பகுதிக்குள் அடித்த பந்தை பிரான்ஸ் வீரர் வில்லியம் சலிபா தலையால் முட்டி விலக்கிவிட்டார். ஆனால் அருகில் நின்ற ஸ்பெயின் வீரர் டானி ஓல்மோ அற்புதமாக செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

76-வது நிமிடத்தில் பிரான்ஸின் தியோ ஹெர்னாண்டஸ், 86-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே ஆகியோர் இலக்கை நோக்கிஅடித்த வலுவான ஷாட் கோல் கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது. கடைசி வரை போராடியும் பிரான்ஸ் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியானது இங்கிலாந்து அல்லது நெதர்லாந்துடன் மோதக்கூடும

x