ஸ்டைலான கிரிக்கெட் வீரர் சின்கிளையர் காலமானார்


ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் சின்கிளையர் காலமானார். அவருக்கு வயது 85.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பேரி சின்கிளையர் 1963 முதல் 1968 வரை விளையாடியுள்ளார். மிகவும் ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என்று வர்ணிக்கப்பட்ட சன்கிளையர், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,148 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் 3-வது வீரராவார். 118 முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள சின்கிளையர், 6,114 ரன்கள் எடுத்துள்ளார்.

இதே நேரத்தில் கிளப் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். 2016-ம் ஆண்டு ராணியின் பிறந்தநாளையொட்டி நியூசிலாந்து ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற குழுவில் இடம்பிடித்து அங்கீகரிக்கப்பட்டவர். எப்போதும், அணியின் 3-வது வீரராக களமிறங்கி அசத்தி வந்த சின்கிளையர் தனது 85-வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

x