6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி முதலிடம்!


இந்திய வீரர்கள்

ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி 6 ஆண்டுக்கு பிறகு முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் இந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது டி20 தொடரையும் இழந்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும்.

இந்நிலையில், ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதன்படி 269 ரேட்டிங் புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது. ஏற்கெனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது.

266 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 3வது இடத்தையும். 255 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4வது இடத்தையும், 253 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 5வது இடத்தையும், 249 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 6வது இடத்தையும் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை 4-1 என வென்றதன் மூலம் இந்த இடத்தில் ஆஸ்திரேலியா நீடித்துள்ளது.

x