ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவில் நடந்து வருகிறது. சாம்பியன் கோப்பை யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல் களமிறங்கினர். அணியின் ரன் 4 ஆக இருந்தபோது பெத்தேல் 2 ரன்னில் ரவிக்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த டாம் பிரிஸ்ட் டக் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ரவிக்குமார்தான் வீழ்த்தினார். இதையடுத்து, ஜேம்ஸ், தாமசுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். தாமஸ் 27 ரன்னிலும், ஜேம்ஸ் 7 ரன்னிலும் விளையாடி வந்தனர்.
தொடர்ந்து, பாவா பந்துவீச களமிறக்கப்பட்டார். அவர் தொடக்க வீரர் தாமஸ் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் வந்த வில்லியம் 4 ரன்னிலும், ஜார்ஜ் பெல் டக் அவுட்டும் ஆனார்கள். தற்போது ஜேம்ஸ் 15 ரன்னிலும், ரிகன் 8 ரன்னிலும் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்துள்ளது.