அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஒரே வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!


கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இன்று 36-வது பிறந்தநாள்.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால்பந்துப் போட்டியில் களம் இறங்கிய ரொனால்டோ, ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். தற்போது இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்கு ஆடி வருகிறார்.

இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே, ஒரு அணிக்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் ரொனால்டோ. இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிவந்தபோது, இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அது மட்டுமன்றி இவர் ரியல் மாட்ரிக் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும், ஒவ்வொரு வருடத்துக்கும் தலா 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 1997-ல் நிசியோனல் என்ற அணியில் விளையாடினார். அதன்பின் ஸ்போர்ரின் சிபி என்ற அணியில் விளையாடும்போது, மான்செஸ்டர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு, 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களுக்கு மான்செஸ்டர் அணிக்காக விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு, யூரோ 2004-ல் முதன்முதலாக போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடுவதற்குக் களமிறக்கப்பட்டார்.

ரொனால்டோவுக்கு புகை, குடிப்பழக்கங்கள் கிடையாது. காரணம், இவரது தந்தை இந்தக் காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்தப் பழக்கங்களை வெறுக்கின்றார். இவர் தனது உடலில் எவ்வித டாட்டூகளும் இட்டுக் கொள்ளமாட்டார். காரணம், இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் ரத்ததானம் செய்யும் பழக்கம் கொண்டவர்.

x