ஜோக்கோவிச்சிக்கு 2வது முறை விசா ரத்து


ஜோக்கோவிச்

போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் போட்டியில் பங்கேற்க செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் கடந்த 6ம் தேதி மெல்பர்ன் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் அவரை விசாரித்த அதிகாரிகள் போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லை எனக்கூறி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விசாவை ரத்துசெய்தனர். தொடர்ந்து ஜோகோவிச்சை நாடுகடத்தும் ஒரு பகுதியாக மெல்பர்ன் விமான நிலையம் அருகே உள்ள விடுதியில் தனிமைப்படுத்தி வைத்தனர்.

ஜோக்கோவிச்

இதை எதிர்த்து ஜோகோவிச் தரப்பில் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, ஜோகோவிச் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த மாதம் ஜோகோவிச் கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரம் தேவையில்லை என்றும் 6 மாதங்களுக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி விதியில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி அந்தோணி கெல்லி அளித்த தீர்ப்பில், ஓட்டலில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ள ஜோகோவிச்சை 30 நிமிடங்களில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை ஜோக்கோவிச்சின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

x