பரபரப்பான கட்டத்தில் கேப்டவுன் டெஸ்ட் போட்டி!


ரிஷப் பண்ட்

கேப்டவுனில் நடந்து வரும் 3வது டெஸ்ட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைக்குமா? என்று ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கோலி 79 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார்.

இதைத் தொடர்ந்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். ரிஷப் பண்ட் மட்டும் 100 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி 198 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

ரிஷப் பண்ட்

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் மார்க்ரம் 16 ரன்னிலும், எல்கார் 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பீட்டர்சன் நிதானமாக விளையாடி 48 ரன்கள் எடுத்துள்ளார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இருக்கும் மீது 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைக்குமா? அல்லது தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி வாகையை சூடுமா? என்பது இன்று தெரிந்துவிடும். ரசிகர்களே பொறுத்திருப்போம்!

x