ச. கோபாலகிருஷ்ணன்
gopalakrishnan.sn@hindutamil.co.in
இன்று கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் பல நாடுகளில் விளையாடப்படுகிறது. உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. சர்வதேசத் தொழில்முறை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, இரண்டு அணிகளும் தலா 50 ஒவர்கள் விளையாடும் ஒருநாள் போட்டி, தலா 20 ஓவர்கள் விளையாடும் ‘டி-20’ போட்டி என மூன்று வடிவங்களில் விளையாடப்படுகிறது. இவற்றில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எனும் ஓவர் வரையறையைக் கொண்ட வடிவம் தொடங்கியதன் ஐம்பதாண்டு விரைவில் முடிவடைகிறது.
உலகின் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971 ஜனவரி 5 அன்று, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்குப் பொன்விழா புத்தாண்டுடன் தொடங்குகிறது.
முடிவு தெரியும் போட்டிகள்