யாருக்கு அடுத்த ‘யெஸ்’..?


“அவ்வளவுதாம்பா…! இனி இந்த ரெக்கார்டை முறியடிக்க ஒருத்தன் பிறந்து வரணும்!” - 2002-ம் ஆண்டில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆந்த்ரே அகாஸியைத் தோற்கடித்து, தனது 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பீட் சாம்ப்ராஸ் வென்றபோது டென்னிஸ் உலகம் உச்சரித்த வார்த்தைகள் இவை. அப்போது சாம்ப்ராஸுக்கு வயது 31.


1994-ல், இரண்டாவது முறை யாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார் சாம்ப்ராஸ். அந்தப் போட்டியை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த நோவக் ஜொகோவிச்சுக்கு அப்போது 7 வயதுதான் இருக்கும். அவர் பார்த்த முதல் டென்னிஸ் போட்டியும் அதுதான். அன்று முதல் பீட் சாம்ப்ராஸ்தான் ஜொகோவிச்சின் ரோல்மாடல்!

16 ஆண்டுகள் கழித்து, ஜொகோவிச், தனது ரோல்மாடலின் சாதனையைக் கடந்த 9-ம் தேதி சமன் செய்திருக்கிறார். ஆச்சரியம்… ஜொகோவிச்சுக்கும் இப்போது 31 வயதுதான்! இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்… சாம்ப் ராஸ் விளையாடிய கடைசிப் போட்டி அதுதான். அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். ஆனால், ஜொகோவிச், இனி படைக்க இருக்கும் சாதனைகளுக்கான கணக்கு இந்தப் போட்டியிலிருந்துதான் தொடங்குகிறது.

எப்படி?

x