பஜ்ரங் கொடுத்த குருதட்சிணை


சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் சேர்க்கும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். மற்ற பிரிவுகள் இந்தியாவைக் கைவிட்டாலும் மல்யுத்தம் மட்டும் இந்தியாவை ஒருபோதும் கைவிட்டதில்லை. அந்த வரிசையில் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்து கவுரவப்படுத்தியுள்ளது மல்யுத்தம். இதை பெற்றுத் தந்தவர் பஜ்ரங் பூனியா.

ஹரியானாவில் உள்ள குந்தன் கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பஜ்ரங் பூனியா. இவரது ஊரில் மல்யுத்த வீரர்கள் பலர் உருவாகி சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். அவர்களின் வரிசையில் தன் மகன்களான பஜ்ரங் பூனியாவையும், ஹரீந்தரையும் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பஜ்ரங்கின் தந்தையான பல்வான் சிங் பூனியா.

பஜ்ரங்குக்கு 7 வயது இருக்கும்போதே அவரது அண்ணன் ஹரீந்தருடன் உள்ளூரில் மல்யுத்த பயிற்சி அளிக்கும் அகாடாக் களுக்கு அழைத்துச் சென்றார் பல்வான் சிங்.
அப்போதெல்லாம், மல்யுத்தம் மாத்திரமல்லாது மல்யுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை யும் பஜ்ரங்கை ரொம்பவே கவர்ந்தது. தினமும் ரொட்டி, தண்ணீர் கலந்த பால் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காத தனது குடும்பத்தின் ஏழ்மையை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் போக்க முடியும் என்று நம்பினார் பஜ்ரங். இதனால் தந்தை அழைத்துச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் பள்ளிக்கு கட் அடித்து அகாடாவில் தவம் கிடந்தார்; மல்யுத்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

அகடாக்களில் அடிக்கடி போட்டிகள் நடக்கும். சிறுவர்களுக்கான பிரிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பஜ்ரங் பூனியாவுக்கு பரிசாக ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. அது மல்யுத்தத்தின் மீதான இவரது காதலை இன்னும் அதிகரித்தது. அந்த நேரத்தில்தான் டெல்லியில் உள்ள சத்ராசால் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு பஜ்ரங் பூனியாவுக்குக் கிடைத்தது.

x