முதல் சுற்றுப் போட்டிகளைக் கடந்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கிறது உலகக் கோப்பை கால்பந்து போட்டி. சிறப்பாக ஆடுவார்கள் என ஏற்கெனவே கணிக்கப்பட்டவர்களில் ரொனால்டோ, ஹாரி கேன், நெய்மர் ஆகியோர் முத்திரை பதிக்க, அவர்களுக்கு இணையாக சில புதிய நட்சத்திரங்களும் இந்த உலகக் கோப்பை மூலம் கவனத்தைப் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி ஒரு களப் பார்வை.
ரொமேலு லுகாகு (பெல்ஜியம்)
இந்த உலகக் கோப்பையில் மையம் கொண்டிருக்கும் கரும் புயல் என்று ரொமேலு லுகாகுவைச் சொல்லலாம். பெல்ஜியம் வீரரான இவர், முதல் 2 போட்டிகளிலும் தலா 2 கோல்களை அடித்து, (மொத்தம் 4 கோல்கள்) தங்கக் காலணிக்கான ரேஸில் தன்னையும் இணைத்துக்
கொண்டிருக்கிறார்.“ஏழ்மையான குடும்பம் என்னுடையது. சிறுவயதில் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க வீட்டில் டிவி வசதியோ, மின்சாரமோ இருக்காது. உணவு என்ற பெயரில் ஒரு குவளை பாலில் 2 குவளை தண்ணீரைக் கலந்து தந்து எங்கள் பசியாற்றுவார் அம்மா. இந்த வறுமையில் இருந்து மீள எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறிதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது” என்கிறார் லுகாகு.நிறவெறி அதிகமுள்ள பெல்ஜியம் நாட்டில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த லுகாகுவால் கடுமையாகப் போராடித்தான் அணியில் இடம்பிடிக்க முடிந்தது. இன்று மொத்த நாட்டுக்கும் அவர்தான் ஹீரோ. கிளப் கால்பந்தில் ‘மான்செஸ்டர் யுனைடட் அணி’க்காக ஆடிவரும் லுகாகுவை, இந்த உலகக் கோப்பைக்குப் பின்னர் அதிக தொகை கொடுத்து வாங்க கிளப்புகள் இப்பவே போட்டி