சேனல்களில் மூழ்கித் திளைக்கும் 16 வயதுப் பெண்களுக்கு மத்தியில், பிளஸ் 1 படிக்கும் வயதில் சாதனை படைத்திருக்கிறார் மனு பாகர் (Manu Bhaker).
சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் தனிநபர் மற்றும் குழுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் மனு பாகர்.
2016-ம் ஆண்டுவரை இவர் துப்பாக்கி சுடுதலைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இத்தனை இளம் வயதில் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் நபர் இவர்தான். மேலும்
உலக அளவில் இப்போட்டியில் தங்கம் வென்ற 3-வது இளம் வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.