நான் சவால்களை நேசிக்கிறேன்.. ‘வார்ரே வா’ வாஷிங்டன் சுந்தர்


இந்தியாவின் கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான, ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. டி-20 போட்டியில் மிகக் குறைந்த வயதில் ஆடியவர், ஒருநாள் போட்டிகளில் ஆடும் 7-வது இளம் இந்திய வீரர் எனப் பல சாதனைகள் வரிசை கட்டி நிற்கும் வாஷிங்டன் சுந்தருக்கு வயது 18தான்.

“இந்தச் சிறிய வயதில் சர்வதேச கிரிக் கெட்டில் அழுத்தமாக தடம் பதித்தது எப்படி” என்று கேட்டால், தன் அப்பா சுந்தரை கைகாட்டுகிறார்.

“என் ஒவ்வொரு முயற்சியிலும் துணை நின்றவர் அப்பாதான். நான் ஒரு போட்டியில் ரன் எடுக்காமல் அவுட் ஆனாலும், சதம் அடித்தாலும் அவர் என்னுடன் உறுதியாக இருந்தார். அவர் இல்லாமல் இருந்தால் எதுவுமே நடந்திருக்காது” என்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

வாஷிங்டனின்  அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் போட்டிகளில் ஆடச் செல்லும்போதெல்லாம் மகனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

x