கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் உற்சவ மூர்த்திக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கக் கிரீடம் நேற்று உபயமாக வழங்கப்பட்டது.
கும்பகோணத்தி்ல் பிரசித்தி பெற்ற சக்கரபாணி கோயில் உள்ளது. இங்குள்ள உற்சவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் 300 கிராம் எடையிலான தங்க கிரீடத்தை சுதர்ஸன பக்தர்கள் சார்பில் அப்பகுதியில் வசிக்கும், ஜி.எஸ்.கிரி, பி.அனந்தராமன், முரளிதரன், என்.கிருஷ்ணன், கே.பாலாஜி, பேராசிரியர் சிவகுமார், பால கார்த்திகேயன், கோபி, ரம்யா ஆகியோர் நேற்று கோயில் செயல் அலுவலர் வினோத் குமாரிடம் வழங்கினர்.
அப்போது, கோயில் அறங்காவல் குழு தலைவர் மணி ரவிச்சந்திரன், அறங்காவலர் கீதா அசோக், சுதர்ஸன பக்தர்கள் குழு அமைப்பாளர் வி.சத்தியநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சக்கரபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, உற்சவமூர்த்திக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது.