உயிர் பிழைத்த மகன்; திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தினார் பவன் கல்யாணின் மனைவி!


சென்னை: தனது மகன் சிறிய காயத்துடன் உயிர் பிழைத்ததால் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை செலுத்தினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் (7) சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். மார்க் சங்கர் சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தார். அவரின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அதிகமான புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


இதனையடுத்து பவன் கல்யாண் உடனடியாக சிங்கப்பூர் விரைந்து சென்றார். அங்கே 2 நாள் சிகிச்சைக்கு பிறகு, பவன் கல்யாண் தனது மகனை ஐதராபாத்திற்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தனது மகன் சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார்.

அன்னா லெஷ்னேவா கிறிஸ்தவர் என்பதால், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

x