ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11ம் நாள் விழாவான நேற்று முன்தினம் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

12ம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். ஶ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஶ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

x