காஷ்மீரில் துவங்கிய பசு பாதுகாப்பு யாத்திரை கன்னியாகுமரியில் நிறைவு


ஆந்திராவை சேர்ந்த கட்டைரக பசுவை ஊர்வலமாக அழைத்து வந்த ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமிகள்.

நாகர்கோவில்: பசு தாயை காப்பதன் மூலம் பூமி தாயை காக்கலாம் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமிகள் காஷ்மீரில் இருந்து துவங்கிய பாதயாத்திரை 182 நாட்களில் 4900 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 14 மாநிலங்களை தாண்டி இன்று (மார்ச் 27) கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பாத யாத்திரை சென்ற பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு பசுவை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, பாதயாத்திரையில் சிறப்பு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த புங்கனூர் கட்டை இனமான ரிதி விஜயலெஷ்மி என்ற பசுவிற்கு கோமாதா பூஜைகளும் செய்யபட்டு வந்தன. இன்று விவேகானந்த கேந்திராவில் நடைபெற்ற யாத்திரை நிறைவு விழா நிகழ்சியில் கேந்திரா நுழைவு வாயிலில் மாணவ மாணவிகள் வரவேற்பு அளித்து ஊர்வலமாக விழா அரங்கத்திற்கு பசுவை அழைத்து வரப்பட்டு நிகழ்சி நடைபெற்றது. நிகழ்சியில் பசுவை தேசிய விலங்காக மாற்ற வேண்டும் என பல வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அகில பாரத கோ சேவா அமைப்பாளர் ஸ்ரீ அஜித் பிரசாந்த் மஹோபாத்தரா, கவ்யசித்தாச்சாரிய பஞ்சகவ்ய வித்தியா பீடம் ஸ்ரீ நிரஞ்சன் வர்மா குரு ஜி , மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டாக்டர் கமல் தவோதி, தெலுங்கானா தர்மரக்ஷா நிறுவனர் ஸ்ரீ சிக்கோட்டி பிரவின் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் ஸ்ரீநாத் செய்திருந்தார்.

x