ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 69 லட்சம் கிடைத்துள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, இணை ஆணையர் சிவராமகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமேசுவரம் கோயில் மற்றும் உபகோயில்களில் இருந்த உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டன. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரத்து 658, தங்கம் 68 கிராம், வெள்ளி 6 கிலோ 50 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளன.