திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 5-ல் பங்குனி திருவிழா கொடியேற்றம்; மார்ச் 19ல் தேரோட்டம்!


திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாக் கொடியேற்றம் மார்ச் 5-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்ய பிரியா, துணை ஆணையர் எம்.சூரிய நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாக் கொடியேற்றம் மார்ச் 5-ம் தேதி காலை 9.15 மணி முதல் 9.45 மணிக்குள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி யானை வாகனத்தில் கைபாரம் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 13-ம் தேி பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெறும். முக்கிய விழாவான பட்டாபிஷேகம் மார்ச் 17-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் நடைபெறும்.

மார்ச் 18-ம் தேதி பகல் 12.15 முதல் 12.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 19-ம் தேதி காலை 6 முதல் 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். மார்ச் 20-ம் தேதி தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும், என தெரிவித்துள்ளனர்.

x