வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்துக்கு தமிழில் வாழ்த்து பிரதமர் மோடி!


புதுடெல்லி: முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ எனத் தெரிவித்துள்ளார்

x