சபரிமலையில் ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: தேவசம் போர்டு அமைச்சர் தகவல்


வயதான பக்தர்களை பம்பையில் இருந்து சபரிமலைக்கு டோலி மூலம் தூக்கிச் சென்ற தொழிலாளர்கள்.(கோப்பு படம்)

தேனி: சபரிமலை​யில் ரோப் கார் அமைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்​படும். அதன் பின்னர் டோலி மூலம் பக்தர்களை தூக்​கிச் செல்​லும் சேவை ரத்து செய்​யப்​படும் என்று தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரி​வித்​துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்து, கடந்த 20-ம் தேதி​யுடன் கோயில் நடை சாத்​தப்​பட்​டது. இந்நிலை​யில், சபரிமலை​யில் பணிபுரிந்த அரசுத் துறை​யினருக்கு திரு​வனந்​த​புரத்​தில் பாராட்டு விழா நடைபெற்​றது. இதில் பங்கேற்ற தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்​தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.440 கோடி. கடந்த ஆண்டு ரூ.360 கோடி வருமானம் கிடைத்​தது. கடந்த ஆண்டைவிட ரூ.80 கோடிக்கு மேல் அதிக வருமானம் கிடைத்​துள்ளது.

சபரிமலைக்கு ரோப் கார் அமைப்​ப​தற்கான பணிகள் விரை​வில் தொடங்​கப்​படும். ரூ.250 கோடி மதிப்​பிலான இத்திட்டம் ஒன்றரை ஆண்டு​களில் முடிக்​கப்​படும். பம்பை​யில் இருந்து சந்நி​தானத்​துக்கு சரக்​குகளை கொண்டு செல்​வது​தான் ரோப் காரின் முக்கிய நோக்​கம். இருப்​பினும், வயதானவர்கள், உடல்​நலக்​குறைவு உள்ளவர்கள் செல்ல அனும​திக்​கப்​படு​வர். ரோப் கார் செயல்​பாட்டுக்கு வந்தால், டிராக்​டர்​களில் சரக்​குகள் கொண்​டு​செல்வது மற்றும் டோலி​யில் பக்தர்களை தூக்​கிச் செல்வது நிறுத்​தப்​படும். அதேநேரம், டோலி தொழிலா​ளர்​களின் மறு​வாழ்வுக்காக வேலை வாய்ப்புகளை உரு​வாக்க நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்​.

x