பிரதோஷம்: நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!


நாளை ஜனவரி 11ம் தேதி முதல் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வரை சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிரதோஷம், பௌர்ணமி தினங்களை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரையிலான 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

எனினும் இந்த நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. மலைப் பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க கூடாது எனவும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

x