அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடை மலை அலங்காரம்!


கோப்புப் படம்

இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடைகளுடன் மாலை சாற்றப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து செல்ல அதிகாலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.

இன்று மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வடை மாலையில் இருந்து 1,00,008 வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

x