மருதமலை கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்


கோவை: கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம், பழநி, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவள்ளூர் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் என 11 கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோயில் மற்றும் கோவை மருதமலை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் இத்திட்டம் இன்று முதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மருதமலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

x