புதுச்சேரி: திருக்கனூரில் இருந்து திருவக்கரை வரை 5 கி.மீக்கு பக்தர்களின் 1008 பால்குட யாத்திரை!


புதுச்சேரி: உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரி திருக்கனூர் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 பால் குட ஊர்வலம் 5 கிலோ மீட்டர் தொலைவு பாதயாத்திரையாக சென்று திருவக்கரை வக்கிரகாளியம்மனை இன்று வழிபட்டனர்.

புதுச்சேரி திருக்கனூர் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி ஆண்டு தோறும் திருவக்கரை வக்ரகாளி அம்மனுக்கு பால் குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட 1008 பால் குட ஊர்வலத்தை சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் டி.பி.ஆர் செல்வம் தொடங்கி வைத்தார்.

இதில் சுற்று கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு புறப்பட்ட பால் குடம் ஊர்வலமானது திருக்கனூரில் இருந்து திருவக்கரை வக்ரகாளி அம்மன் ஆலயம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரையாக சென்றனர். அங்கு வக்கிரகாளி அம்மனுக்கு உலக நன்மைகள் வேண்டியும் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி திருக்கனூர் வக்ரகாளியம்மன் வழிபாட்டு மன்றத்தைச் சார்ந்த பக்தர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு வக்ரகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.

x