காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.57.36 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் 56 நாட்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.57,36,782 செலுத்தி இருந்தனர்.
தங்கம் 178 கிராம், வெள்ளி 611 கிராம் இருந்தன. உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியை அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், செயல் அலுவலர் ச.சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கோயில் பணியாளர்கள், ஆன்மிக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.