திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம்: லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்


திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் கருவறையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் மூன்று நாள் தீபத் திருவிழாவின் முதல் தீபமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை முன்பாக ஏற்றப்படும் தீபம் பரணி தீபம். இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கொட்டும் மழையிலும் மகாதீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகா தீபத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரம், கோயில் வளாகம் மின் விளக்குகளால் ஜொலிப்பதால் திருவண்ணாமலை நகரமே விழாக் கோலமாக காட்சியளிக்கிறது. இன்று மகாதீபாத்தை தரிசிக்க சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் பாதுகாப்பு பணிகளில் 14,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

x