பாதுகாப்பு பணியில் 14,000 காவலர்கள் - திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் எப்படி?


திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 17 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த டிச.1-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை (டிச.13-ம் தேதி) அதிகாலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளன.

மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவை தொடர்ந்து பவர்ணமி கிரிவலம் மறுநாள் (14-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையடுத்து 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடு முறை நாள் என்பதால் தொடர்ந்து 3 நாட்களுக்கு திருவண்ணாமலையில் கடல் அலைகளாக பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கணித்துள்ளன.

இதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 156 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிச.9-ம் தேதி முதல் டிச.16-ம் தேதி வரை 8 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. கிரிவலப் பாதை, கோயில் மாட வீதியில் 18 சிறப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், குழந்தைகளை எளிதாக அடையாளம் காணும் வகையில், அவர்களது கையில் பெற் றோர் பெயர் மற்றும் கைபேசி எண்ணுடன் பட்டை கட்டப்பட உள்ளன. 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தங்கள், 120 இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துமிடம் அமைக் கப்பட்டுள்ளன.

3,408 சிறப்பு பேருந்துகள் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் இயக்கப்படவுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதையை இணைக்கும் சாலை வரை செல்வதற்காக ரூ.10 கட்டணத் தில் 36 பேருந்துகளும், கட்டண மின்றி 194 தனியார் பேருந்து களும் இயக்கப்படவுள்ளன.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதையில் 700 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அண் ணாமலையார் கோயில் வளா கத்தில் இருதய நோய் சிறப்பு மருத்துவருடன் 3 சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கிரிவலப் பாதை மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் 85 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் என 50 வாகனங் கள் தயார் நிலையில் வைக்கப் படவுள்ளன. தீயணைப்புத் துறை சார்பில் 23 வாகனங்களுடன் சுமார் 750 வீரர்கள் தயார் நிலை யில் உள்ளனர்.

நெடுஞ்சாலை துறை சார்பில் கிரிவலப் பாதையில் 14 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் குடிநீர், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன. மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கிரிவலப் பாதை மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல்,502 நிரந்தர மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட் டுள்ளன. தூய்மைப் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். இதற்காக, அண்டை மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணி யாளர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். 244 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட வுள்ளன. கூடுதலாக சிறப்பு ரயில் களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

x