கார்த்திகை ஞாயிறு: வீட்டில் இப்படி தீபமேற்றி வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகும்!


இன்று கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை. பொதுவாகவே கார்த்திகை மாதத்தை தீபங்களின் மாதம் என்கிறோம். கார்த்திகை மாதங்களின் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்தால் நம் இல்லத்தில் தரித்திரம் விலகி ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அப்படி மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட முடியாவிட்டாலும் கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது மறக்காமல் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பூஜையறையில் நாம் அமர்த்தியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது பல நன்மைகளைத் தந்தருளும்.

ஞாயிற்றுக்கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். மாலை நேரத்தில் சந்திரனின் ஆதிக்கம் வந்துவிடும். மறுநாள் திங்கட்கிழமையும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். திங்கள் என்றால் சந்திரன் என்று அர்த்தம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரனின் ஆதிக்கம் தொடங்குகிற வேளையில், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும்.

x