6 அடி வேல் காணிக்கை: பழநியில் ரஷ்ய பக்தர்கள் சுவாமி தரிசனம்


பழநி: பழநி முருகன் கோயிலில் 6 அடி வேலை காணிக்கையாக செலுத்தி ரஷ்ய பக்தர்கள் இன்று (செவ்வாய்கிழமை) சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இன்று (செவ்வாய்கிழமை) ரஷ்ய நாட்டில் இருந்து வந்திருந்த 2 பெண்கள் உட்பட 5 பக்தர்கள் படிப் பாதை வழியாக நடந்தே மலைக்கோயிலுக்கு சென்றனர். முருகன் சந்நிதியில் 12 கிலோ எடை கொண்ட 6 அடி பித்தளை வேலை காணிக்கையாக செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்ததோடு கோயிலின் கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் மிக ஆச்சரியமாகவும் ஆர்வத்தோடு கண்டு வியந்தனர். பின்னர் வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு சென்று, நவ கிரக கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

x