சபரிமலை ஐயப்பன் கோயிலில் விரைவு தரிசனத்துக்காக முதியோர், குழந்தைகளுக்கு தனிப்பாதை அமைப்பு 


சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு பாதையில் சென்று நேற்று காலை ஐயப்பனை தரிசனம் செய்த குழந்தைகள்.

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் முதி​யோர் மற்றும் குழந்தைகள் விரைவாக​வும், சிரமமின்​றி​யும் தரிசனம் செய்​யும் வகையில் தனி​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்டு மண்டல காலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயி​லில் கடந்த 15-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. தினமும் ஆன்லைன் மூலம் அதிகபட்​சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனும​திக்​கப்​பட்டு வருகின்​றனர்.

18-ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் செல்​கின்​றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதி​யோர், குழந்தைகளை கை தூக்கி விடு​வதற்​கும் போலீ​ஸார் பணியில் ஈடுபட்​டுள்​ளனர். 15 நிமிட சுழற்சி அடிப்படை​யில் இந்த போலீ​ஸார் பணி மாற்றம் செய்​யப்​படு​கின்​றனர்.

இந்நிலை​யில், முதி​யோர் மற்றும் குழந்தைகள் விரைவாக​வும், சிரமம் இன்றி​யும் தரிசனம் மேற்​கொள்​வதற்காக சிறப்பு வழி ஏற்படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்படி இவர்​களுக்கு 18-ம் படிக்கு முன்னதாக உள்ள காத்​திருப்பு பகுதி​யில் இருந்து தனிப்​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​வழியே 18-ம் படி ஏறிய​வுடன் மேல்தள இரும்​புப் பாலம் வழியாக சுற்றுப்​பாதை​யில் செல்​லாமல் நேரடியாக தரிசனத்​துக்கு செல்​லலாம். இவர்​களுடன் உதவிக்கு கூடு​தலாக ஒருவர் செல்​லலாம். இந்த வசதி​யால் முதி​ய​வர்​களும், குழந்தை​களும் சிரமம் இன்றி குறைந்த நேரத்​தில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்​றனர்.

தேவசம்​போர்டு விளக்கம்: இதுகுறித்து தேவசம்​போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறும்போது, ‘‘பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்​களில் 18-ம்படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்​தானம் முன்பு செல்​லலாம். தற்போது நெரிசல் அதிகரித்​துள்ள​தால் முதி​யோர், குழந்தை​களின் சிரமத்தை குறைக்க தனி வழி அமைக்​கப்பட்​டுள்​ளது. இதில் இவர்கள் எளிதாக சென்று தரிசனம் செய்​ய​லாம்.மற்ற பக்தர்​களைப் பொறுத்​தவரை 18-ம் படி ஏறியதும் இரும்பு மேம்​பாலம் வழியே சந்​நி​தானத்​தின் பின்​பகுதி, பக்​கவாட்டு பகு​திகளைக் கடந்து ​முன்​புறம் உள்ள மூலஸ்தான பாதைக்கு வர வேண்​டும்’’ என்றார்​.

x