புதுக்கோட்டை மாவட்ட முத்துமாரியம்மன் கோயில்களில் தேரோட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று மாலை நடைபெற்ற தேரோட்டம்.  

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முத்துமாரியம்மன் கோயில்களில் தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 12-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 19-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (மே 27) முக்கியத் திருவிழாவான தேரோட்டத்தையொட்டி சப்பரத்தில் பேச்சி அம்மனும், சிறிய தேரில் வாழவந்த பிள்ளையாரும், பெரிய தேரில் முத்துமாரியம்மனும் எழுந்தருளல் செய்யப்பட்டது. பின்னர், பக்கர்கள் தேர்களின் வடத்தைப் பிடித்து 4 வீதிகளிலும் இழுத்து வந்தனர்.

இதேபோல, அணவயல், குருச்சிகுளம், அரசர்குளம் கீழ்பாதி, காரையூர் முத்துமாரியம்மன் கோயில் மற்றும் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில்களிலும் தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாக்களில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

x