நவராத்திரி: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை!


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற ஸ்ரீசக்கர பூஜை.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சக்கர பூஜை இன்று நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த புதன்கிழமை இரவு காப்புக்கட்டு உற்சவத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாவது நாளான இன்று, ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரவு பர்வதவர்த்தினி அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். நவராத்திரி திருவிழாவில் இன்று அம்பாளுக்கு சிவ துர்க்கை அலங்காரமும், நாளை சரஸ்வதி அலங்காரமும், அக்.7ல் கௌரி சிவபூஜை அலங்காரமும், 8ம் தேதி சாரதாம்பிகை அலங்காரமும் செய்யப்படும்.

தொடர்ந்து 9ம் தேதி கஜலட்சுமி அலங்காரத்திலும் 10ம் தேதி மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 11ம் தேதி துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி அலங்காரத்திலும் பர்வதவர்த்தினி அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய விழாவான அக்.12 அன்று பர்வதவர்த்தினி அம்பாள் வன்னி நோம்புத் திடலில் அசுரனை எய்தும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.

x