காசி: வாராணசியில் உள்ள பல கோயில்களில் இருந்து சாய்பாபாவின் சிலைகளை இந்து அமைப்பினர் அகற்றியுள்ளனர்.
சனாதன் ரக்ஷக் தள அமைப்பினர் வாராணசியில் உள்ள படா கணேஷ் கோயிலில் இருந்து சாய்பாபா சிலையை அகற்றி, கோயில் வளாகத்திற்கு வெளியே வைத்தனர். இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறுகையில், “சாய் பாபாவை சரியான அறிவு இல்லாமல் வழிபடுகிறார்கள், இது சாஸ்திரப்படி தடைசெய்யப்பட்டுள்ளது” என்றார். இதேபோல் அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் பூரி கூறுகையில், “சாய் பாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறினார்
இதற்கிடையில், அயோத்தியின் ஹனுமன்கர்ஹி கோயிலின் அர்ச்சகர் மஹந்த் ராஜு தாஸ், "சாய் ஒரு மத போதகர், அவர் கடவுளாக இருக்க முடியாது. வாரணாசியில் சாய்பாபாவின் சிலையை அகற்றிய நபருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் சாய்பாபாவின் சிலையை நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து அகற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்
சனாதன் ரக்ஷக் தளத்தின் மாநிலத் தலைவர் அஜய் சர்மா பேசுகையில், ''காசியில் (வாரணாசி) சிவன் வழிபாடு மட்டுமே நடக்க வேண்டும். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏற்கனவே 10 கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களில் அகஸ்த்யகுண்டா மற்றும் பூதேஷ்வர் கோயில்களில் இருந்தும் சாய்பாபா சிலைகள் அகற்றப்படும்” என்றார்.