பழநி ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்


பழநி: பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக அக்.7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிகளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதமும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.

அதன்படி, வரும் அக்.7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் இந்த 40 நாட்களும் மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

x