மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்


ராமேசுவரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருவது வழக்கம்.

இந்நிலையில், நாளை (அக்.2) மகாளய அமாவாசை தினம் என்பதால், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணி யளவில் நடை திறக்கப்பட்டு, சாயரட்சை பூஜை, கால பூஜை நடைபெறும்.

அதையடுத்து, காலை 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் ராமர் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலிக்கிறார்.

இரவில் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவுக்கான காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக அக்னி தீர்த்தக் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகளும், ராமேசுவரத் திலுள்ள பல சத்திரங்களில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

x