'காவடியும் வேலும்’; 15 நிமிடம் இடைவிடாமல் பரதநாட்டியம் ஆடி மாணவர்கள் சாதனை முயற்சி!


காவடி, வேல் வைத்து பரதநாட்டியம் ஆடி சாதனை

தேனியில் வைகாசி விசாகம் நிகழ்ச்சியை முன்னிட்டு, வேல் மற்றும் காவடி வைத்து 15 நிமிடங்கள் இடைவிடாமல் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் சிபியூ மேல்நிலைப் பள்ளியில் லய பாவ ரேணு நிருத்தியாலாயா நடன பயிற்சி பள்ளி சார்பில் 'காவடியும் வேலும்' என்ற தலைப்பில் உலக சாதனை படைப்பிற்காக மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5வயது முதல் 14 வயது வரையுள்ள 150 மாணவிகள் பங்கேற்றனர். 15 நிமிடங்கள் இடை விடாமல் காவடி மற்றும் வேல் வைத்து பரதநாட்டியம் ஆடினர்.

காவடி, வேல் வைத்து பரதநாட்டியம் ஆடி சாதனை

இந்த நிகழ்வை, திருச்சியைச் சேர்ந்த விரிக்ஷா புக் ஆஃப் வேல்டு ரெகார்டஸ் (உலக சாதனை விருது) என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. இதில் நிறுத்திய மங்கை, நிறுத்திய வேலன் என்ற 2 விருதுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் உலக சாதனை படைத்த மாணவிகள் மற்றும் லய பாவரேணு நிருத்தியாலாயா நடன பயிற்சி பள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

சிபியூ மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருமலை சந்திரசேகரன், விரிக்ஷா புக் ஆஃப் வேல்டு ரெகார்டஸ் நிறுவனத்தின் நடுவர் ரெங்கநாயகி ஆகியோர் உலக சாதனை விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியை ஏராளமான மாணவர்களும், அவர்களது பெற்றோரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

x