பக்தர்களிடம் காணிக்கையாக பெற்ற 535 கிலோ தங்கம்... வங்கியில் டெபாசிட் செய்ய கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


கேரளா உயர் நீதிமன்றம்

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 535 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களை தேவசம் போர்டு என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. கோயில்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின் மற்றும் கூடல்மாணிக்யம் ஆகிய 5 தேவசம் போர்டுகள் கேரளாவில் இயங்கி வருகின்றன.

இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கீழ் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் காணிக்கையாக பெறப்படும் பணம் மற்றும் நகைகளை இவ்வமைப்பு நிர்வகித்து வரும் நிலையில், தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ய அனுமதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு

இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேவசம் போர்டின் கீழ் உள்ள கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணிக்கையாக பெறப்பட்ட 535 கிலோ தங்கத்தை முதலீடு செய்வதின் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை நீதிமன்ற அனுமதியுடன் செலவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

x