அசத்தல்... 5 ஆயிரம் அமெரிக்க வைரங்களில் தயாரான நெக்லஸ்: ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்க முடிவு!


ராமர் கோயில் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள வைர நெக்லஸ்.

5 ஆயிரம் அமெரிக்க வைரங்களைப் பயன்படுத்தி, அயோத்தி ராமர் கோயில் வடிவில் வைர நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராமர் கோயிலுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது.

ராமர் கோயில் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள வைர நெக்லஸ்.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், 5 ஆயிரம் அமெரிக்க வைரங்களைக் கொண்டு அயோத்தி ராமர் கோயில் வடிவில் வைர நெக்லஸை வடிவமைத்துள்ளார். இந்த நெக்லஸ் 2 கிலோ வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ராமாயண முக்கிய பாத்திரங்கள் நெக்லஸில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து நகையை வடிவமைத்த ராஜேஷ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையின் இயக்குநர் கெளசிக் காக்கதியா கூறுகையில், "வணிக நோக்கத்தில் நாங்கள் இந்த நகையை வடிவமைக்கவில்லை.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் எங்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ராமர் கோயிலுக்கு ஏதாவது பரிசாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனைத் தயாரித்தோம். எனவே, இந்த நெக்லஸை ராமர் கோயிலுக்கே பரிசாக வழங்க விரும்புகிறோம்" என்றார்.

ராமர் கோயில் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள நெக்லஸ் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்

x