கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி! வீடு வீடாக விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள்!


இஸ்லாமியர்கள் வழங்கிய விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூஜை பொருட்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் வழங்கினர். மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக கிருஷ்ணகிரியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலைகளுடன் இஸ்லாமியர்கள்

மக்களிடையே மத மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய முயற்சிப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் நடந்தேறியுள்ளது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பிரசாதங்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி, அவற்றுடன் பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள் உள்ளிட்டவற்றை இந்துக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.

பூஜை பொருட்களுடன் விநாயகர்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட இந்த செயல் கிருஷ்ணகிரி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

x