மத்தியப்பிரதேச மாநிலம் ஓம்கரேஷ்வரில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர ஆதி சங்கராச்சார்யா சிலையை அம்மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று திறந்து வைக்கிறார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஓம்கரேஷ்வரில் ரூ.2141 கோடி மதிப்பில், நர்மதா நதிக்கரையில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர ஆதி சங்கராச்சார்யா சிலையை இன்று அம்மாநிலத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் திறந்து வைக்கிறார். 12 வயது சிறுவனாக ஆதி சங்கரர் இருப்பதைப் போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் மாந்ததா பர்வத் மலையில் சங்கராச்சாரியாரின் உலோகச் சிலையை நிறுவும் பணிகள் முழுவதுமாக முடிந்திருக்கின்றன.
சிலையின் மொத்த உயரம் 108 அடி. சிலை அருகே அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதி சங்கராச்சார்யாவின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் நவீன மற்றும் புதுமையான வழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.