சபரிமலை புதிய கீழ்சாந்தியாக நாராயணன் பொட்டிக்கு பொறுப்பு - இன்று முதல் சேவை!


இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் கீழ் சாந்தியாக இருந்த ஸ்ரீ.காந்த் பணிநிறைவு பெற்றார்.

எனவே இன்று மாலை முதல் ஒரு வருடம் சுவாமி ஐயப்பனுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சபரிமலை கீழ் சாந்தி நாராயணன் பொட்டி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் இன்று முதல் தனது பணியினை தொடங்குகிறார். இன்று புரட்டாசி மாதப்பிறப்பு நாளை தொடங்குவதால் செப்டம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.

x