வேகமெடுக்கும் நிபா வைரஸ்... சபரிமலை யாத்திரைக்கான வழிகாட்டுதலை வெளியிடுங்கள்... உயர் நீதிமன்றம் உத்தரவு!


சபரிமலை

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சபரிமலை யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோழிக்கோடு

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை நிபா வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கோழிக்கோட்டில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா காய்ச்சல் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு நடைதிறக்கும் போது, தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர், சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

x