டிசம்பர் 27ம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


ஹெத்தையம்மன் கோயில் திருவிழா (கோப்பு படம்)

புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில், பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் படுகர் இன மக்கள், இந்த திருவிழாவிற்காக சொந்த ஊர்களுக்கு திரும்புவர். குன்னூர் அருகே உள்ள ஜெகதலாவை தலைமையிடமாக கொண்டு, காரக்கொரை, போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை , மஞ்சுதலா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இத்திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஜனவரி 6ம் தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா

இது தொடர்பாக ஊர் பெரியவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ஏராளமானோர் இந்த திருவிழாவிற்காக சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் கொடுத்தது பாஜக எம்.பி - வெளியானது முதற்கட்ட தகவல்!

x